Saturday, November 15, 2014

மருதரசர்கள் கட்டிய சத்திரங்கள்!

சிவகங்கையில் வரியாக வசூலிக்கப்பட்ட 15 லட்சம் ரூபாயில் பேஷ்குஷ் ஆக 3 லட்ச ரூபாய் போக எஞ்சியதில் மூன்றில் ஒரு பகுதி சத்திரங்களுக்காக ஒதுக்கப்பட்டது. இது பிற்காலத்திய நிலை. ஆனால் மருதரசர்கள் காலத்தில் அவற்றிற்கென்று தனியாக கிராமங்கள் விடப்பட்டிருந்தின. சத்திரங்கள் அனைத்துமே மருது சகோதரர்களால் கட்டப்பெற்றவையே.

ஒரு முறை சத்திரத்து நிர்வாகியாக இருந்த அப்பனய்யங்கார் என்பவர் சாப்பாடு தயார் இல்லை, அப்புறம் வா என்றதும் அதிதியாக வந்தவருக்கு கோபம் வந்துவிட்டது. 'சத்திரத்து சோத்துக்கு அப்பனய்யங்கார் மணியமா?' மருதுபாண்டியர்கள் வழங்குகிற சாப்பாட்டிற்கு அப்பனய்யங்கார் என்ன மணியம் (அதிகாரம்) பண்ண வேண்டிக்கிடக்கிறது. இவன் சொந்த செலவிலா போடுகிறான்" என்று வந்தவருக்கு கோபம் ஏற்பட்டு மருதர்சர்களிடம் புகாரும் செய்து விட்டார்.

ஆக இந்த அளவில் சத்திரங்களை தாராளமாக அவர்களால் நிறுவ முடிந்ததற்கு காரணம் நாட்டில் நல்ல விளைச்சல் கண்டிருக்க வேண்டும்.
தற்காலத்தில் மாவட்ட ஆட்சியர் வழங்கும் "தஸ்திக்" படி (Dastik allowance) மூலம் பெயரளவில் மட்டுமே சத்திர நிர்வாகம் நடக்கிறது.

சிவகங்கை சமஸ்தான சத்திர நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள பட்டியலில் 20 சத்திரங்கள் மட்டுமே உள்ளன. இவற்றில் பழங்காலச் சத்திரங்கள் சில விடுபட்டுள்ளன. மாமன்னர் மருதுபாண்டியர்கள் கட்டிய சத்திரங்கள் பசும்பொன் மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம், காமராசர் மாவட்டம் மட்டுமல்லாமல் நெல்லை மாவட்டத்தில் கூட அமைந்திருந்தன.

மாவட்ட வாரியாக மருதரசர்கள் கட்டிய சத்திரங்கள் பட்டியல் :-

பசும்பொன் மாவட்டத்தில் :-

1) சிவகங்கை அகிலாண்டேசுவரி சத்திரம்.
2)சிவகங்கை ராஜா சத்திரம்.
3)ஆனந்தாயி ஆத்தாள் சத்திரம்.
4)காளையார் கோயில் சத்திரம்.
5)திருப்புத்தூர் சத்திரம்.
6)திருக்கோட்டியூர் சத்திரம்.
7)பிரான்மலைச் சத்திரம்.
8)மானாமதுரைச் சத்திரம்.
9)முத்தனேந்தல் சத்திரம்.
10)திருப்புவனம் கோட்டைச் சத்திரம்.
11)திருப்புவனம் புதூர்ச் சத்திரம்.
12)குன்றக்குடி அப்பன்சாமி சத்திரம்.
13)குன்றக்குடி காடன்செட்டியார் சத்திரம்.

இராமநாதபுரம் மாவட்டத்தில்:-

14)தொண்டி சத்திரம்.
15)கலியநகரிச் சத்திரம்.
16)சூடியூர்ச் சத்திரம்.
17)பரமக்குடிச் சத்திரம்.
18)பாம்பன் சத்திரம்.
19)அழகன்குளம் சத்திரம்.

காமராசர் மாவட்டத்தில் :-

20)நரிக்குடிச் சத்திரம்.
21)சீனிக்காரனேந்தல் சத்திரம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் :-

22) நான்குநேரி சத்திரம்....

நன்றி: வரலாற்று ஆசிரியர் மீ.மனோகரன்

0 comments:

Post a Comment